For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐஎம்எப்பின் முதல் பெண் தலைவர் கிறிஸ்டைன் லகார்டே!

By Shankar
Google Oneindia Tamil News

Christine Lagarde
நியூயார்க்: சர்வதேச நிதி அமைப்பின் (ஐ.எம்.எஃப்.) அடுத்த தலைவராக பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்டே (55) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் இந்த அமைப்பின் முதலாவது பெண் தலைவர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஐஎம்எஃப் தலைவராக இருந்த ஸ்டிராஸ் கானின் மீது பாலியல் புகார் கூறப்பட்டதையடுத்து, அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு அடுத்தபடியாக அந்தப் பதவிக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஐஎம்எஃப் அமைப்பின் செயற்குழு வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை கூடியது.

மெக்ஸிகோ மத்திய வங்கி ஆளுநர் அகஸ்டின் கார்ஸ்டென்ஸ், லாகர்டே ஆகியோருக்கு இடையே இந்தப் பதவிக்கு கடுமையான போட்டி இருந்தது.

எனினும் அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் லகார்டே தேர்வு செய்யப்பட்டார்.

லகார்டே தேர்வானதை, பிரான்ஸுக்கு கிடைத்த வெற்றி என அந்நாட்டு அதிபர் சார்கோஸியின் அலுவலகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மீண்டும் ஐரோப்பிய நாடுகளே ஐஎம்எஃப்பில் ஆதிக்கம் செலுத்தும் நிலை தொடர்கிறது.

English summary
France’s Christine Lagarde was named on Tuesday as the first-ever female chief of the IMF, faced with an immediate crisis as violent Greek protests rocked the stability of the eurozone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X