2ஜி ஊழல் வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை-கனிமொழி, ராசா ஆஜர்

விசாரணையைத் தொடர்ந்து கனிமொழி, ராசா உள்ளிட்டோர் சிறப்பு சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோடை விடுமுறைக்காக மூடப்பட்ட நீதிமன்றம் இன்று திறக்கப்படுகிறது. இதையடுத்து 2ஜி உள்ளிட்ட பல வழக்கு விசாரணை இன்று மீண்டு துவங்குகிறது.
2ஜி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி இயக்குனர் சரத் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கனிமொழி எம்பிக்கு ஜாமீன் கொடுக்க மறுத்த உச்ச நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்குமாறு அவரிடம் கூறியது.
இந்நிலையில் விடுமுறை முடிந்து இன்று நீதிமன்றம் திறக்கப்படுகிறது. இதையடுத்து 2ஜி ஊழல் வழக்கு விசாரணை மீண்டும் துவங்குகிறது. இந்த வழக்கில் இதுவரை 2 குற்றப்பத்திரிக்கைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இதில் 14 தனி நபர்கள் மற்றும் 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜூலை 2-வது வாரத்தில் தனது மூன்றாவது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
முதல் குற்றப்பத்திரிக்கை ஏப்ரல் 2-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராசா, பல்வா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பஹுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா, யூனிடெக் நிறுவன எம்.டி. சஞ்சய் சந்திரா, டிபி ரியாலிட்டி பிரமோட்டர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அடாக் அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திர பிபாரா, கௌதம் தோஷி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன.
2-வது குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன என்பது நினைவிருக்கலாம்.
முனனாள் அமைச்சர் ராசா, திமுக எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன பிரமோட்டர் ஷாஹித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட 14 பேர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications