For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கடலில் அகதிகள் படகு மூழ்கி செளதிக்கு சென்ற 197 பேர் பலி

By Chakra
Google Oneindia Tamil News

The Red Sea
அதிபா (சூடான்): சூடானிலிருந்து 200 அகதிகளை ஏற்றிக் கொண்டு செளதி அரேபியாவுக்குச் சென்ற படகு தீப்பிடித்து எரிந்து, கடலில் மூழ்கியதில் 197 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கடும் கலவரம் நடந்து வரும் சூடான், சோமாலியா, எரித்ரியா, எதியோப்பா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை, பசி, பட்டியினியிலிருந்து தப்பி செளதியில் தஞ்சம் புக 200 பேர் நாட்டுப் படகில் சூடான் நாட்டின் அதிபா நகரிலிருந்து கிளம்பினர். இந்தப் படகு 4 மணி நேரம் பயணித்த நிலையில் அதில் தீப்பிடித்துக் கொண்டது.

இதையடுத்து அந்தப் படகு எரிந்து கடலில் மூழ்கியதில் 197 பேர் பலியாகிவிட்டனர். 3 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையே நடந்துவிட்டதாகவும், ஆனால், சூடான் அரசு இப்போது தான் அதை வெளியில் சொல்வதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக படகின் உரிமையாளரான ஏமனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நைஜீரியா, சாட், சோமாலியா, எரித்ரியாவைச் சேர்ந்த 247 பேரை ஏற்றிக் கொண்டு செளதிக்குச் செல்ல இருந்த ஒரு படகும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

English summary
A ship packed with refugees bound for Saudi Arabia has caught fire and capsized off the northeastern coast of Sudan, killing 197 people, the Sudanese Media Centre, a state-linked news agency, has said. The ship had launched from the Red Sea State, one of Sudan's 26 states, and sailed for four hours in Sudanese territorial waters before the blaze broke out, according to the news agency. The boat had several nationalities on board, including Somalians, Eritreans, Ethiopians and Sudanese.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X