கன்னியாகுமரியில் சூறைகாற்று: மீன்பிடி தொழில் பாதிப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சூறைகாற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீன்பிடி தொழி்ல் பெரிதும் பாதி்க்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதும், மழை கொட்டுவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்று காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன.
கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி அருகே சின்னமூட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் மற்றும் கட்டுமரங்கள் கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications