For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கதேசத்தில் முஜிபுர் ரஹ்மான் நினைவு தினம்-சோக தினமாக அனுசரிப்பு

Google Oneindia Tamil News

காத்மாண்டு: வங்கதேசத்தில் இன்று தேசிய சோக தினம் அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

இந்தியாவில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, மேல்மட்ட தலைவர்கள் முதல், பள்ளி கல்லூரி, தெருமுனைகள் என எல்லா இடங்களிலும், தேசியக் கொடி கம்பீரமாக இன்று பறக்கவிடப்படுகிறது. ஆனால், வங்கதேசத்தில் இன்று தேசிய சோக தினம் அனுசரிக்கப்படுகிறது.

பாகிஸ்தானிடம் இருந்த வங்கதேசத்தை தனி நாடாக பிரிக்க போராடியவர், பங்கபந்து எனப்படும் ஷேக் முஜீபர் ரகுமான். இறுதியில் இந்தியாவின் துணையுடன் வங்கதேசம் உருவானது. கடந்த 34 ஆண்டுகளுக்கு ரஹ்மான் குடும்பத்துடன் கொல்லப்பட்டார். 26 பேர் அப்போது படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் தற்போதைய பிரதமர் ஷே ஹசீனா உள்ளிட்ட ரஹ்மானின் 2 மகள்கள் மட்டுமே உயிர் தப்பினர்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. மக்களின் மனதில் மாறாத இடம் பிடித்த ரஹ்மான், வங்கதேசத் தந்தையாக போற்றப்படுகிறார். அவரது இறப்பை, தேசிய சோக தினமாக ஆண்டுத்தோறும் அனுசரித்து வருகிறது வங்கதேசம்.

இன்று ரஹ்மான் நினைவு தினமாகும். இதையடுத்து வங்கதேசத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லா அரசு அலுவலகங்களிலும், அந்நாட்டு தேசியக் கொடி அறைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

தேசிய சோக நாள் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஷேக் ஹசீனா, பங்கபந்து கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அளித்த தீர்ப்பு மூலம் நாட்டின் மீது படிந்த கறை நீக்கப்பட்டது, என்றார்.

English summary
When India celebrates its Independence Day on today, the Bangladesh High Commission here will hoist its national flag at half mast to mourn the massacre of Father of the Nation ‘Bangabandhu' Sheikh Mujibur Rahman. We have freed the nation from the stigma to some extent through executing the verdict of the Bangabandhu killing case,” said Prime Minister Sheikh Hasina said on the occasion of National Mourning Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X