பேரன் வில்லியமின் மனைவி கேத் மிடில்டனுக்கு எக்சர்சைஸ் டிப்ஸ் கொடுக்கும் இளவரசர் பிலிப்

Subscribe to Oneindia Tamil

Prince Philip and Kate Middleton
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டனும், வில்லியமின் தாத்தா இளவரசர் பிலிப்பும் நல்ல நண்பர்களாகி விட்டனராம். இருவரும் தினசரி தொலைபேசியில் பேசிக் கொள்கின்றனராம். பேரனின் மனைவிக்கு உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி குறித்து நிறைய டிப்ஸ் கொடுக்கிறாராம் பிலிப்.

எலிசபெத், பிலிப் தம்பதியின் மூத்த மகனான சார்லஸின் மூத்த மகன் வில்லியம் சமீபத்தில் தனது காதலி கேட் மிடில்டலனை மணந்தார்.தற்போது கேட் மிடில்டனுக்கு நல்ல நண்பராகி விட்டார் தாத்தா பிலிப். தினசரி போனில் பேத்தியுடன் பேசி விடுகிறாராம். உடல் நலத்தை சிறப்பாக பேணுவது குறித்து நிறைய டிப்ஸ் கொடுக்கிறாராம். உடற்பயிற்சி செய்வது, உடல்நலத்தைப் பேணுவது உள்ளிட்டவை குறித்து டிப்ஸ் மழை பொழிகிறாராம்.

பிலிப்புக்கு இப்போது 90 வயதாகிறது. பிலிப் தரும் அட்வைஸ்கள் கேட் மிடில்டனுக்கு பிடித்துப் போய் விட்டதாம். தன் மீது அக்கறையுடன் பிலிப் பேசுவதும் அவரை கவர்ந்து விட்டதாம்.

90 வயதிலும் தான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதையும், உடலாக ஆரோக்கியமாக வைத்திருப்பது எவ்வளவு அவசியம் என்பதையும் பிலிப், தனது பேத்திக்கு சொல்லி அவரையும் அதேபோல உடல் ஆரோக்கியத்தைப் பேணுமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம்.

உடற்பயிற்சி டிப்ஸ் மட்டுமல்லாமல், சமையலறையை எப்பபடி சிறப்பாக வடிவமைப்பது, எப்படி அதை சிறப்பாக பராமரிப்பது என்பது குறித்தும் டிப்ஸ் தருகிறாராம் பிலிப். இந்த டிப்ஸை தனது பேரன் வில்லியமுக்கு சொல்லிக் கொடுத்துள்ளாராம் தாத்தா பிலிப்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+