கருணாநிதி மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி மீது நில மோசடி வழக்கு

Subscribe to Oneindia Tamil

Selvi and karunanidhi
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் டாக்டர் ஜோதிமணி மீது நில மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, தயாளுஅம்மாள் தம்பதியின் மகள் செல்வி. இவரின் மருமகன் டாக்டர் ஜோதிமணி. அவர் மீது சென்னை போலீசார் நில மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை தி. நகரைச் சேர்ந்த சோமசேகர் என்பவர் பாண்டி பஜார் போலீசில் நில மோசடி புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

தியாகராயநகர் ஜி.என்.செட்டி ரோட்டில் எனக்கு சொந்தமாக இடம் உள்ளது. அந்த இடத்திற்கு செல்வதற்கு முன்பக்கத்தில் உள்ள நிலம் தேவைப்பட்டது. அந்த நிலத்தை வாங்கித் தருவதாக டாக்டர் ஜோதிமணி என்பவரும் (திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன்), அவரது உறவினர்களும் சேர்ந்து ரூ.1 கோடியே 40 ஆயிரம் வாங்கினார்கள். நிலத்தை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அவரது புகாரின்பேரில் பாண்டி பஜார் போலீசார் டாக்டர் ஜோதிமணி மீது நில மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் இப்போதைக்கு யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+