எல்லை தாண்டியதாக 40 இந்திய, பாகிஸ்தான் மீனவர்கள் கைது
கராச்சி: பாகிஸ்தான் கடல் எல்லைகளுக்குள் சென்றதாக 20 இந்திய மீனவர்களும், இந்திய எல்லையை தாண்டியதாக 20 பாகிஸ்தான் மீனவர்களும் இரு நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்திய-பாகிஸ்தான் நாடுகளிடையிலான கடல் எல்லைகளை இரு நாட்டு மீனவர்களும் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இதனால் இரு நாட்டு கடற்படையினரும், இரு தரப்பு மீனவர்களையும் கைது செய்வதும் வழக்கமாக உள்ளது.
இரு தரப்பும் கைது செய்து பின்னர் விடுவித்து விடுவர். இலங்கை கடற்படைக் கொலைப் படையைப் போல மீனவர்களைத் தாக்குவதோ, சுட்டு வீழ்த்துவதோ கிடையாது.
மேலும் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மகா மெளனமாக இருக்கும். ஆனால் பாகி்ஸ்தான் கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களை மீட்க கடுமையாக போராடும்.
நேற்று அரபிக்கடலில் உள்ள காஜர் சிற்றோடை பகுதிக்குள் புகுந்த 20 பாகிஸ்தான் மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செயதனர். அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர். பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய கடற்படையினர் தங்களை துப்பாக்கி முனையில் கைது செய்ததாக கைதான பாகிஸ்தானிய மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலையில் பாகிஸ்தான் எல்லையை கடந்ததாக 20 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் கராச்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய மீனவர்களிடம் இருந்து 4 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications