திருச்சி சிறையில் பயங்கர மோதல்-போலீஸ் தடியடியில் 20 கைதிகள் காயம்
திருச்சி : திருச்சி மத்திய சிறையில் இன்று கைதிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. போலீஸார் நடத்திய தடியடியில் 20 கைதிகள் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி சிறையில் கடந்த 2 நாட்களாக பிளாக் எண் 6ல் அடைக்கப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட கைதிகள் சாப்பாடு சரியில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை ஏழரை மணியளவில் அவர்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டபோது மிகவும் மோசமாக உள்ளதாக சிறை அதிகாரிகளிடம் அவர்கள் மீண்டும் புகார் கூறினர்.
இந்த நிலையில் ஜெயிலர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் போலீஸார் திடீரென அந்த கைதிகளின் அறைகளுக்கு வந்து அதிரடி சோதனையில் இறங்கியதாக கூறப்பட்டது.
இதைக் கண்டு அதிருப்தி அடைந்த கைதிகள், நாங்கள் சாப்பாடு சரியாக இல்லை என்று கூறி வருவதால் வேண்டுமென்றே ரெய்டு நடத்தி பொய் வழக்குப் போட முனைகிறீர்களா என்று கேட்டுள்ளனர்.
இதையடுத்து கைதிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது போலீஸார் தாக்கியதில் ஒரு கைதி படுகாயமடைந்து விழுந்தார். இதைப் பார்த்த மற்ற கைதிகள் போலீஸாருடன் மோதலில் குதித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீஸாரும், சிறைக் காவலர்களும் தடியடி நடத்தினர். இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் சிறைக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் 30 கைதிகள் சிறை வளாகத்திற்குள் உள்ள மரத்தில் ஏறிக் கொண்டு போராட்டத்தில் குதித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிறைத்துறை டிஐஜி துரைசாமி, கண்காணிப்பாளர் சுந்தரராஜன் விரைந்துள்ளனர். அவர்கள் கைதிகளுடன் பேசி வருகின்றனர். கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அவை நிறைவேறும் வரை மரத்திலிருந்து இறங்கப் போவதில்லை என்று அந்த கைதிகள் கூறியுள்ளனர்.
சிறைக்குள் ஏற்பட்ட இந்த மோதல் குறித்துத் தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் மக்கள் சிறையைச் சுற்றிலும் குழுமியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications