For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.736 அதிகரிப்பு!: பிரச்சனை ஐரோப்பாவில்.. பாக்கெட் கிழிந்தது தி.நகரில்!

By Chakra
Google Oneindia Tamil News

Gold
சென்னை: சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலையேற்றத்தால் தங்கத்தின் விலை ஒரே நாளில் நேற்று பவுனுக்கு ரூ.736 உயர்ந்தது.

ஐரோப்பாவில் நிலவி வரும் பொருளாதார சிக்கல்களால் யூரோ கரன்சி மற்றும் டாலரின் மதிப்பு சரிந்து வருகிறது. இந் நிலையில் கிரீஸ், ஸ்பெயின், போர்சுகல் உள்ளிட்ட கடனில் தத்தளிக்கும் நாடுகளுக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் சில முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளது.

இதனால், யூரோ மற்றும் டாலரின் மதிப்பில் மேலும் மாறுதல்கள் ஏற்படும் என்பதால், பணத்தை பத்திரமான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்ய ஐரோப்பிய நாடுகளில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் நேற்று பவுனுக்கு ரூ. 736 அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.92 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.2608க்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு பவுன் விலை ரூ. 20,864.

இந்த விலை அடுத்த சில நாட்களில் ரூ. 21,000த்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளியையொட்டி விலை உயர்ந்துள்ளதாகக் கருதப்பட்டாலும், உண்மையான காரணம் ஐரோப்பிய நாடுகளின் நிதிப் பிரச்சனை தான்.

English summary
Gold futures settled at their highest level in almost five weeks, buoyed by renewed appetite in low-risk assets ahead of the European Union's comprehensive plan for the region's debt problems
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X