For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹில்லரி கிளிண்டனின் தாயார் மரணம்: ஒபாமா இரங்கல்

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹில்லரி கிளிண்டனின் தாயார் டாரத்தி ரோதம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹில்லரி கிளிண்டனின் தாயார் டாரத்தி ரோதம்(92). தனது மகளுக்கு என்றுமே பக்கபலமாக இருந்தவர். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார். மரணப்படுகையில் இருந்த தாயின் அருகில் இருப்பதற்காக ஹில்லரி தனது லண்டன் மற்றும் இஸ்தான்புல் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார்.

டாரதி ஹோவல் ரோதம் கடந்த 1919ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி சிகாகோவில் பிறந்தார். பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவருடன் சேர்ந்து பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். கடந்த 2000ம் ஆண்டு கிளிண்டன் இந்தியாவுக்கு வந்தபோது அவருடன் டாரத்தியும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் கிளிண்டனும் சேர்ந்து கடந்த 1998ம் ஆண்டு சீனாவில் சுற்றுப்பயணம் செய்தார்.

டாரத்தி எதனால் இறந்தார் என்பது தெரிவிக்கப்படவில்லை. டாரத்திக்கு ஏதாவது செய்யவிரும்புபவர்கள் அவர் சிகிச்சை பெற்ற ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவமனைக்கு நன்கொடை அளிக்குமாறு ஹில்லரி குடும்பத்தார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

டாரத்தி ஒரு அருமையான பெண்மணி. அவர் மறைவு கிளிண்டன் குடும்பத்திற்கு பேரிழப்பு. அவர்களுக்கு நானும், மிஷலும் ஆழந்த் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

English summary
US secretary of state Hillary Clinton's mother Dorothy Howell Rodham has died of illness. She was 92. Hillary has cancelled her trips to London and Istanbul to be with her mother at ther bedside.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X