For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வர்த்தகரீதியில் மிக விருப்பமான நாடு இந்தியா: பாக் ஒப்புதல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: இந்தியாவை மிக விருப்பமான நாடாக பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வர்த்தக உறவு வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வர்த்தகத்துறை அமைச்சர் பிர்தூஸ் ஆசிக் ஆவான் கூறியதாவது :

பாகிஸ்தானின் விருப்ப நாடுகளி்ன் வரிசையில் இந்தியாவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் 100க்கும் மேற்பட்ட நாடுகளுடன் வர்த்தக உறவை வைத்துள்ளது. இருப்பினும் இந்தியாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வர்த்தக ரீதியாக உறவை ‌மேம்படுத்துவதில் பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது.

ஒரு சில எம்.பிக்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அனைவருக்‌கும் இதில் ஒரு மித்த கருத்தே நிலவுகிறது. மேலும்காஷ்மீர் பிரச்னைக்கும் இந்த வர்த்தக உறவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று குறி்ப்பிட்டார். 2010-2011-ம் ஆண்டில் 2.6 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும் ‌தெரிவித்தார்.

தொடர்ந்து மாலத்தீவில் நடைபெற உள்ள சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இருநாட்டு பிரதமர்களும் சந்தித்து பேசுவர் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். ‌கடந்த 1996ம் ஆண்டு முதல் பாகிஸ்தானை விருப்ப நாடாக இந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakistan on Wednesday granted the "Most Favoured Nation" (MFN) status to India, reciprocating a 15-year-old gesture. India Inc said the decision will push up trade sharply.India had given Pakistan the MFN status in 1996 but Islamabad did not respond positively.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X