For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஓட்டுக்கு நோட்டு' விவகாரம்: எல்லா விஷயும் எனக்குத் தெரியும், கூறுகிறார் அமர்சிங்

Google Oneindia Tamil News

Amar Singh
டெல்லி: 2008ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களும் தன்னிடம் உள்ளதாக அமர்சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பான வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமர்சிங் சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலையாகி வெளியேவந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு அனைத்தும் தெரியும் என்றும், கோர்ட்டில் வழக்கு உள்ளதால் முழுமையாக சொல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அமர்சிங். அப்போது அவர் கூறுகையில், எனக்கு இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துத் தகவல்களும் தெரியும். ஆனால் கோர்ட்டில் வழக்கு இருப்பதால் அதை முழுமையாக வெளியிட இயலாது.

எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. என் மீது சமாஜ்வாடி கட்சியினர் சிலர் அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றனர். ஆனால் அதற்கு நான் பதிலளிக்கப் போவதில்லை. நீதித்துறையை மட்டுமே நான் நம்புகிறேன்.

எனது சிறுநீரகப் பிரச்சினை தொடர்பான சிகிச்சைக்காக நவம்பர் 15 அல்லது 16ம் தேதி நான் சிங்கப்பூர் செல்கிறேன்.

எனது டாக்டர் அமெரிக்காவுக்குப் போயுள்ளதால் எனது பயணம் தாமதமாகியுள்ளது. எனது பயணம் குறித்த முழு விவரங்களையும் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து விட்டே செல்வேன் என்றார் சிங்.

English summary
Rajya Sabha MP Amar Singh, facing prosecution for his alleged role in the 2008 cash-for-vote scam, today claimed he has "full information" about the episode but refused to comment as case is sub-judice. "I have full information about the case. But I will not comment as the matter is sub-judice," Singh said addressing a press conference in Delhi. The former Samajwadi Party leader said he has full faith in judiciary and would not comment on the scam although a section in SP was trying to "defame" him. He said he would go to Singapore either on November 15 or 16 for further treatment of his kidney ailment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X