For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாலத்தீவில் போலீஸ் அகாடமி அமைக்க இந்தியா உதவி – மன்மோகன் சிங்

By Shankar
Google Oneindia Tamil News

Manmohan Singh
மாலே: பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இந்தியாவும் மாலத்தீவும் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதற்காக மாலத்தீவில் தேசிய போலீஸ் அகாடமி அமைப்பதற்கு உதவி புரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலத்தீவு சென்ற பிரதமர் மன்மோகன் சிங் மலேயில் உள்ள நாடளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றினார். இங்கு பேசும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையுடன் பேசிய அவர் கூறுகையில், "இந்த கூட்டத்தில் உரையாற்ற வாய்ப்பளித்தது எனக்கும், எனது நாட்டிற்கும் அளிக்கப்பட்ட மிகப்பெரிய மரியாதையாக கருதுகிறேன். இந்த பயணம் மறக்க முடியாத ஒன்றாகும். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது," என குறிப்பிட்டார்.

பயங்கார வாதத்தை ஒடுக்க கூட்டு நடவடிக்கை

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், மாலத்தீவும் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இதற்காக மாலத்தீவில் போலீஸ் அகாடமி அமைக்க இந்தியா உதவி புரியும் என்று கூறினார். பின்னர் இருநாட்டு பிரதமர்களும் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டனர். மாலத்தீவின் வளர்ச்சிக்காக 10 கோடி டாலர் கடன் வழங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

English summary
Prime Minister Manmohan Singh was on Saturday accorded the "unique" honour of being the first foreign dignitary to address the multi-party 'People's Majlis', Maldives' Parliament, after it came into being in 2009. Singh read out his speech outlining the "time-tested" relationship India had with this picturesque island nation as all the 75 MPs of the Majlis listened in rapt attention.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X