For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரூரில் 6 மணி நேரம் மின்வெட்டு: தொழில்கள் பின்னடைவு, தொழிலாளர்கள் கடும் அவதி

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் நகரில் தினமும் 6 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கொங்கு மண்டலத்தில் முக்கிய நகரம் கரூர். இந்த நகரத்தில் ஜவுளி உற்பத்தி, சாயம் ஏற்றுதல், பஸ் பாடி கட்டுதல், கொசுவலை தயாரித்தல் போன்ற தொழில்கள் மிக பிரபலம். இந்த தொழிலை நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையி்ல் கரூரில் தினமும் காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம், இரவு 2 மணி நேரம் என மொத்தம் சுமார் 6 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த மின்வெட்டின் காரணமாக மேற்கூறிய தொழில்களும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இப்படி அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் தொழில் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கரூர் மாவட்டத்தில் தொழில்கள் பெரும் பின்னடவை சந்தித்துள்ளது.

English summary
Karur is suffocating because of the frequent powercut in a day. Karur is compelled to lead life without power for 6 hours in a day. Industry owners and workers are in blues as the powercut incurs heavy loss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X