For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திரபாபு நாயுடுவின் சொத்துக்கள் குறித்து சிபிஐ விசாரணை - ஆந்திரா ஐகோர்ட் உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் சொத்துக்கள் மூன்று மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் ஆந்திரா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக விசாரிக்கவும் ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சந்திரபாபுவின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் புலிவெந்துலா சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவுமான ஒய்.எஸ்.விஜயா, ஆந்திரா ஐகோர்ட்டில் கடந்த அக்டோபர் 17 ம் தேதி மனுதாக்கல் செய்தார்.

முறைகேடான சொத்துக்கள்

தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு 1995ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை ஆட்சி செய்த போது ஏராளமான சொத்துகளை முறைகேடாக சேர்த்துள்ளார். அதனை காப்பாற்றுவதற்காக அறக்கட்டளைகளை துவக்கி ஏமாற்றியிருப்பதாக அந்த மனுவில் விஜயா குறிப்பிட்டிருந்தார். சந்திரபாபு நாயுடு மக்களை ஏமாற்றி சொத்துக்களை குவித்திருப்பதாகவும் தமது மனுவில் விஜயா சுட்டிக்காட்டியுள்ளார். எனவே சந்திரபாபு நாயுடு மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்

அந்த மனு நீதிபதி குலாம் முகம்மது மற்றும் நூடி ராம்மோகன்ராவ் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தேசிய, மற்றும் சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டிய வழக்கு என்று தெரிவித்தனர். எனவே சந்திரபாபு நாயுடுவின் சொத்துக்கள் குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை, மற்றும் செபி ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 39.88 கோடி ரூபாய் என சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Andhra Pradesh High Court today asked the CBI and Enforcement Directorate to conduct an investigation into the assets of former Chief Minister and Telugu Desam Party president N Chandrababu Naidu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X