For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அலுவலகத்திற்குள் விட மறுத்ததால் மக்கள் நலப்பணியாளர் மாரடைப்பால் மரணம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தென்காசி : தென்காசி அருகே உயர்நீதிமன்ற உத்தரவின் படி பணியில் சேரச் சென்ற மக்கள் நலப்பணியாளர் ஒருவரை அலுவலகத்திற்கு அனுமதிக்க மறுத்ததால் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் அச்சன் புதுரை அடுத்த நெடுவயல் ஊராட்சியை சேர்ந்தவர் முத்தையா சாமி. 52 வயதான அவர் மக்கள் நலப்பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் மக்கள் நலப்பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. அரசின் உத்தரவிற்கு 21 –ம் தேதி வரை சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எடுத்துக்கொண்டு இன்று பணியில் சேருவதற்காக முத்தையாசாமி நெடுவயல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால் முத்தையாசாமியை அலுவலகத்திற்கு விட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த முத்தையாவிற்கு திடீர் மாரடைப்பு எற்பட்டது. அலுவலக வாயிலியே மயங்கி விழுந்த முத்தையாசாமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

English summary
A Makkal Nala Paniyalar named Muthayasamy died near tenkasi of heart attack. today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X