For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஎன்பிஎஸ்சி இணைச் செயலாளர், ஊழியர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்ட்!

By Chakra
Google Oneindia Tamil News

TNPSC
சென்னை: தமி்ழ்நாடு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் மீண்டும் அதிரடி ரெய்ட் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாகவே தற்போது சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலமே தமிழக அரசுப் பதவிகளான குரூப் 1 , குரூப் 2 அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தத் தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் எழுவது வழக்கம்.

இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இயக்குனர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 16 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

சென்னை மற்றும் திருச்சியில் அந்த ரெய்டுகள் நடந்தன.

அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் இவர்கள் மீது இந்திய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீன் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் சோதனையில் முக்கிய ஆவணங்களை வைத்து அறிக்கை தயார் செய்த அதிகாரிகள் அதில் டிஎன்பிஎஸ்சியில் பணிபுரியும் பல அலுவலர்களுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. இணைச் செயலாளர் மைக்கேல் ஜெரால்ட், கீழநிலை செயலாளர் ரவி இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் உஷா, ராமமூர்த்தி, லோகநாதன், பாலாஜி, ராதாகிருஷ்ணன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் நேர்முக உதவியாளர் சதீஷ்குமார் மற்றும் சுகுமாரன் ஆகியோர் உள்ளிட்ட பலரது வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.

மொத்தம் 14 இடங்களில் இந்தச் சோதனைகள் நடக்கின்றன.

English summary
Vigilance officials today conducted searches at the residences of some officials of the Tamil Nadu Public Service Commission in connection with alleged irregularities in conducting exams to various posts. The raids by officials of the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) were on in 14 places here, including at the residence of TNPSC Joint Secretary Michael Gerald, DVAC sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X