For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிங்பிஷருக்கு ரூ.1,200 கோடி வழங்கப் போகும் தனியார் முதலீட்டாளர்!

Google Oneindia Tamil News

Vijay Mallya
பெங்களூர்: கடும் நிதி நெருக்கடியில் உள்ள கிங்பிஷர் ஏர்லைன்சுக்கு ரூ. 1760 கோடி கடன் ($370 million) பெறுவது குறித்து இந்தியாவைச் சேர்ந்த தனியார் முதலீட்டாளர் மற்றும் ஸ்டேட் வங்கி தலைமையிலான 14 வங்கிகளுடன் இறுதிக் கட்ட பேச்சு நடந்து வருவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இதைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளில் இந்த நிறுவனம் ரூ. 7,000 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 13 வங்கிகள் ரூ. 2,000 கோடி வரை முதலீடு செய்துள்ளன.

நஷ்டத்திலிருந்து வெளியே வருவதற்கும் அன்றாட செலவுகளுக்கும் கிங்பிஷர் நிதி திரட்டாத வரை அதில் மேலும் முதலீடு செய்ய மாட்டோம் என இந்த வங்கிகள் அறிவித்துள்ளன.

இந் நிலையில் கிங்பிஷரில் இந்திய தனியார் முதலீட்டாளர் ரூ. 1,200 கோடி வரை முதலீடு செய்ய முன் வந்துள்ளதாகவும், அதே போல ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகள் ரூ. 560 கோடி ($118 million) வரை முதலீடு செய்ய உள்ளதாகவும் மல்லையா தெரிவித்துள்ளார்.

ஆனால், மற்ற 13 வங்கிகளின் பெயரைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார். அதே நேரத்தில் முந்தைய கடனுக்கு வட்டியைக் குறைக்கவும் வங்கிகள் முன் வந்துள்ளதாகவும் அவர் அந்தப் பத்திரிக்கையில் கூறியுள்ளார்.

இவ்வளவு நிதியை முதலீடு செய்யப் போகும் அந்த இந்திய முதலீட்டாளர் யார் என்பது தெரியவில்லை.

English summary
he chairman of Kingfisher Airlines, Vijay Mallya, said in an interview with a newspaper on Friday he was close to sealing a $370 million deal with an Indian private investor and a consortium of banks that would save the airline. The Bangalore-based entrepreneur told a newspaper he was nearing a deal with 14 banks led by State Bank of India that would provide the loss-making carrier with working capital of $118 million. He did not name the banks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X