For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2ஜி ஆவணங்களைப் பெற்றார் சாமி-சிதம்பரத்திற்கு எதிரான ஆதாரம் என தகவல்

Google Oneindia Tamil News

Subramaniam swamy
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக 400 பக்கங்களுக்கும் மேலான முக்கிய ஆவணங்களை சுப்பிரமணியசாமியிடம் சிபிஐ வழங்கியுள்ளது.

இதையடுத்து, ப.சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு இது போதுமான ஆதாரமாக அமைந்துள்ளது என்று சாமி கூறியுள்ளார்.

2ஜி வழக்கில், ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறி வருகிறார் சாமி.இதற்கான ஆதாரமாக, சிதம்பரத்திற்கும், ராசாவுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தை அவர் மேற்கோள் காட்டி வருகிறார்.

மேலும் அந்தக் கடிதங்களை தனக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் சிபிஐ கோர்ட்டில் மனு செய்தார். அதை விசாரித்த கோர்ட், சாமி கேட்கும் ஆவணங்களைத் தருமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.

சிறிய இழுபறிக்குப் பின்னர் நேற்று சாமி கேட்ட ஆவணங்களை சிபிஐ சாமியிடம் ஒப்படைத்தது. தொலைத் தொடர்புத்துறையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இவை. 400 பக்கங்களுக்கும் மேல் உள்ளது.

இந்த ஆவணங்கள் 2008ம் ஆண்டு நவம்பர் முதல் 2009ம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்திற்குட்பட்டவை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் இதில் ப.சிதம்பரத்தி்ற்கும், ராசாவுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து எதுவும் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த ஆவணங்கள் குறித்து சாமி கூறுகையில், இந்த ஆவணங்கள் எனக்குத் திருப்தி தருகிறது. ப.சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இது போதுமான ஆதாரமாகும்.

இதை முழுமையாக படித்த பின்னர் வருகிற 27 அல்லது 28ம் தேதி எனது விளக்கத்தை கோர்ட்டில் சமர்ப்பிப்பேன் என்றார்.

டிசம்பர் 3ம் தேதி சிபிஐ கோர்ட்டில் 2ஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

English summary
The CBI on Thursday handed over a DoT file, containing over 400 pages of file notings and 2G related deliberations between the finance ministry and ministry of telecommunications, to Janata Party chief Subramanian Swamy. CBI sources claimed the documents were of period between November 2008 and July 2009 and didn't have any correspondence between the then telecom minister A Raja and then finance minister P Chidambaram. "I am satisfied with the documents. I have now got enough material to make allegation against Chidambaram...," Swamy said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X