For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டக்காரர்கள் அதிருப்தி

By Siva
Google Oneindia Tamil News

Koodankulam Protest
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக மத்திய, மாநில குழுக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்படவில்லை என்று மாநில குழுவில் உள்ள போராட்டக்காரர்கள் குழு பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை மூடக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பொதுமக்களின் அச்சத்தைப் போக்க நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணை வேந்தர் முத்துநாயகம் தலைமையில் அணுசக்தி, சுற்றுச்சூழல், கதிரியக்க நிபுணர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்த குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை கலெக்டர் செல்வராஜ், எஸ்பி விஜயேந்திர பிதாரி, போராட்டக் குழு சார்பில் புஷ்பராயன், ஜேசுராஜ், யாக்கோபுரம் தங்கராஜ் ஆகியோர் கொண்ட குழுவை மாநில அரசும் அமைத்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று மத்திய குழுவினர் 3வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் இந்திய அணுசக்தி அதிகாரிகளிடம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.

கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள கதிரியக்க பாதுகாப்பு அம்சங்கள், சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கைகள், விவிஇஆர் அணு உலைகளின் செயல்பாட்டு திறன், அணுமின் நிலையத்துக்கு தேவையான தண்ணீர் இருப்புகள், அணு உலையில் இருந்து வெளியாகும் வெப்பம் கலந்த நீரால் கடலில் ஏற்படும் சீதோசன மாற்றங்கள், இந்திய நில அமைப்பு படி அணு உலை கட்டப்பட்டிருக்கும் இடத்தின் தேர்வு, இயற்கை சிற்றங்களால் அணுமின் நிலையம் பாதிக்காதவாறு அதன் பாதுகாப்பு அம்சங்கள், அணு உலையின் தொழில் நுட்ப வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஆவணங்களை கேட்டறிந்து அதன்படி கூடங்குளம் அணு உலை கட்டப்பட்டுள்ளதா என அவர்கள் ஆய்வு செய்தனர்.

கூடங்குளத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்திய அணுசக்தி கழக தலைமையிடமான மும்பையில் இருந்து வந்த செயல் இயக்குனர் குந்தீப் தலைமையிலான அதிகாரிகள் செயல் விளக்க படங்களுடன் மத்திய குழுவிற்கு விளக்கினர். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினர் கொடுத்த 50 கேள்விகளுக்கு பதில்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய, மாநில குழுக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இந்த பேச்சுவாரத்தை திருப்திகரமாக இல்லை என்று மாநிலக் குழுவில் உள்ள போராட்டக்குழு பிரதிநிதி ஒருவர் தெரிவி்த்தார். மத்திய குழு கூடங்குளம் மக்களின் பிரச்சனைகளை ஆராய முன்வரவில்லை என்றும், இனி தமிழக அரசு சொன்னால் மட்டுமே மீண்டும் மத்திய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

English summary
The second round of talks between the centre and state teams held in Tirunelveli collector office fails. So, the protesters are going to continue their protest. The state team member cum one of the protesters' representative has told that centre team is not ready to address Koodankulam people's issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X