For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் பாஜக தலைவர் நிதின் கட்காரியுடன் ஸ்டாலின் சந்திப்பு

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் நிதின் கட்காரியை சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்பியும் தனது சகோதரியுமான கனிமொழியை சந்திக்க சமீபத்தில் டெல்லி சென்ற ஸ்டாலின், சென்னை திரும்ப விமான நிலையத்துக்கு வந்தபோது நிதின் கட்காரியை எதேச்சையாக சந்தித்தார்.

தமிழக அரசியல் போல் அல்லாமல், இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கிக் கொண்டு கை குலுக்கிக் கொண்டனர்.

பின்னர் ஸ்டாலினை விமான நிலையத்தின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற கட்காரி அவரிடம் பேசினார். முதலில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்த கட்காரி, தொடர்ந்து சில அரசியல் விவகாரங்கள் குறித்தும் பேசினார்.

அதே போல சமீபத்தில் நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி கூட, ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுகவைச் சேர்ந்தவர்கள் மட்டும் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள், சுதந்திரமாக உலவுகின்றனர் என்று குற்றம் சாட்டியதை சுட்டிக் காட்டிய ஸ்டாலின், பாஜகவின் இந்தக் கருத்துக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்தச் சந்திப்பால் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லாவிட்டாலும், காங்கிரஸ் விஷயத்தில் பாஜகவின் கருத்தை ஸ்டாலின் சுட்டிக் காட்டி நன்றி தெரிவித்தது முக்கியத்துவம் பெறுகிறது.

English summary
MK Stalin meets bjp leader Nitin Gadkari at Delhi airport
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X