For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாழ்வு மண்டலம் திசைமாறியது – மழை படிப்படியாக குறையும்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Satellite View
சென்னை: அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத்தீவு நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டில் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியுள்ளதாவது:

குமரிக்கடலிலும், அதையொட்டி உள்ள பகுதியிலும் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் அங்கிருந்து 120 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. அது வடமேற்கு நகர்ந்து லட்சத்தீவில் உள்ளது. அதாவது திருவனந்தபுரத்தில் இருந்து 460 கிலோ மீட்டர் தூரத்தில் வடமேற்கு திசையில் நேற்று நிலை கொண்டுள்ளது.

அது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 72 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கில் நகர வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மழை படிப்படியாக குறையும் மழை குறையும்

மழை அளவு

கடந்த 24 மணி நேரத்தில், பள்ளிப்பட்டு மற்றும் குன்னூரில் அதிகளவாக 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாபநாசம், திருவள்ளூர், ராமேஸ்வரம் தலா 15 செ.மீ., கொடைக்கானல், திருவாலங்காடு, சேரன்மகாதேவி தலா 11 செ.மீ., கெய்ட்டி, இரணியல், கடலாடி, ஒட்டப்பிடாரம் தலா 10 செ.மீ., சங்கரன்கோவில், செங்கோட்டை தலா 9 செ.மீ., ராஜபாளையம், கோத்தகிரி பூதப்பாடி, திருச்செந்தூர், கழுகுமலை, , அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, ஆயிக்குடி, சென்னை விமானநிலையம், கேளம்பாக்கம் தலா 8 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூர், போடிநாயக்கனூர், ஊட்டி, அரக்கோணம், கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை,பேச்சிப்பாறை, ஸ்ரீவைகுண்டம், சிவகிரி, மரக்காணம், வல்லம், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

கூடுதல் மழை

கரூர் மாவட்டத்தில் 70 சதவீதம் கூடுதல் மழைபெய்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 65 சதவீதமழை அதிகமாக பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 56 சதவீதமும், நெல்லை மாவட்டத்தில் 53 சதவீதமும், கடலூர் மாவட்ட மாவட்டத்தில் 52 சதவீதமும், சென்னை மாவட்டத்தில் 6 சதவீத மழையும் கூடுதலாக பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கமாக பெய்யக்கூடிய மழையைவிட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

English summary
Met office sources said the depression, which lay centred at about 350 km of Thiruvananthapuram moved in a north-westerly direction and lay centred over Kerala. It intensified further into a deep depression and now lay centred about 460 km north west of Thiruvananthapuram. Due to this development rain wil continue for next 24 hrs and recede gradually.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X