For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவனிடம் ரூ. 2000 கொடுத்து ஆசிரியையை கொல்லச் சொன்ன உதவித் தலைமை ஆசிரியர்!

Google Oneindia Tamil News

சேலம்: மாணவனிடம் ரூ. 2000 பணம் கொடுத்து தனக்குப் பிடிக்காத ஆசிரியையை மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டுக் கொலை செய்யச் சொன்ன உதவி தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அந்த உதவி தலைமை ஆசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் இந்த பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது.

சேலம், கோகுலநாதா இந்து மகாஜனா மேல் நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் தமிழ்மணி. அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருப்பவர் சசிகலா. இருவருக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்மணி மீது அப்துல்லா என்ற மாணவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தமிழ்மணி என்னிடம் ரூ. 2000 பணம் கொடுத்தார். பின்னர் ஆசிரியை சசிகலாவை, முதல் மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்யுமாறு கூறினார். நான் இதை ஏற்க மறுத்தேன். அப்படிச் செய்ய மறுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தமிழ்மணி என்னை மிரட்டினார். ஆனால் நான் கொலை செய்ய விரும்பவில்லை.இதனால் புகார் கொடுக்கிறேன் என்று கூறினார்.

இதையடுத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் அனைத்து ஆசிரியர்களையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்தனர். தமிழ்மணியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். மாணவர் அப்துல்லாவும் வரவழைக்கப்பட்டார்.

அப்போது ஏற்கனவே சசிகலாவுக்கும், தமிழ்மணிக்கும் இடையே மோதல் உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே போலீஸார் ஒருமுறை விசாரித்து பிரச்சினையை தீர்த்து வைத்தனர் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது.

மேலும், மாணவரிடம் பணம் கொடுத்து ஆசிரியை சசிகலாவை கொல்ல உத்தரவிட்டை தமிழ்மணி போலீஸாரிடம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து, ஆபாசமாக நடந்து கொள்வது, வேண்டுமென்றே காயம் ஏற்படுத்த முயற்சித்தது, குற்றச் செயலில் ஈடுபட தூண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியை சசிகலாவை கொல்லுமாறு தமிழ்மணி தொடர்ந்து மிரட்டி வந்ததால் பயந்து போன அப்துல்லா பள்ளிக்குப் போகவில்லை. மேலும் மன உளைச்சல் அடைந்த அவர் வீட்டில் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். அவரைக் காப்பாற்றிய குடும்பத்தினர் என்ன பிரச்சினை என்று கேட்டபோதுதான் தமிழ்மணியின் மிரட்டல் குறித்து கூறியுள்ளார் அப்துல்லா.

இதையடுத்து பெற்றோரின் ஆலோசனைப்படி போலீஸில் புகார் கொடுத்தார் அப்துல்லா.

English summary
An assistant headmaster of a government-aided school in Salem has been arrested on the basis of a complaint lodged by a Class XI student claiming that the former had intimidated him to kill a teacher of the institution. The AHM Tamil Mani has been booked under Section 294 (Obscene Act), Section 323 (Voluntarily Causing Hurt) and Section 506 (2) — Criminal Intimidation, of the IPC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X