நெல்லையில் கந்து வட்டி கும்பல் அராஜகம்: காங்கிரஸ் எம்.பி. ராமசுப்பு புகார்
நெல்லை: நெல்லையில் கந்து வட்டி கும்பல் அராஜகத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படடுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராமசுப்பு புகார் தெரிவி்த்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தில் உள்ள எங்கள் பெட்ரோல் நிறுவனத்தில், 12 ஆண்டுகளாக மேலாளராக பட்டமுடையார்புரம் அருணாச்சலம் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அருணாச்சலமும், அவரது உறவினர் திருநாவுக்கரசும் சேர்ந்து எங்கள் மீது போலீசாரிடம் பொய் புகார் கொடுத்துள்ளனர். இதில் சிறிதும் உண்மையில்லை. இது குறித்து போலீசாரிடம் உரிய முறையில் விளக்கி உள்ளேன்.
இந்த விவகாரம் பற்றி நாங்கள் விசாரித்த போது ஆலங்குளத்தைச் சேர்ந்த கந்துவட்டி கும்பலிடம் பணம் வாங்கி இருக்கிறார் அருணாச்சலம். இதற்காக 2 நபர்கள் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக கடனுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பி சென்றுள்ளது தெரிய வந்தது.
இது குறித்து செல்லப்பாண்டியன் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட சிலர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். இதே போல் மாவட்டத்தில் கந்துவட்டி கும்பல் அராஜகம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications