For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனிமொழி விடுதலை குறித்து கருணாநிதி நிம்மதிப் பெருமூச்சு!

Google Oneindia Tamil News

சென்னை: கனிமொழி விடுதலையாகி வீடு வந்ததும் அவரிடம் அப்பாடா வந்தியா என்று கேட்பேன் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த தகவலைத் தொடர்ந்து நேற்று தனது இல்லத்தில் கருணாநிதி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேள்வி: கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இப்போது உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது?

கருணாநிதி: மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கேள்வி: அவர்கள் வந்தவுடன் முதலில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: அப்பாடா! வந்தியா?

கேள்வி: இவ்வளவு நாள் தாமதமாக ஜாமீனில் விட்டிருக்கிறார்கள். தற்போதுள்ள சட்ட விதி முறைகளைப் பற்றி நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

பதில்: ஜாமீன் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைய வேண்டிய நேரத்தில் தாமதத்திற்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருக்க முடியாது.

கேள்வி: சிறையில் ஆறு மாத காலம் கஷ்டங்களை யெல்லாம் கனிமொழி அனுபவித்திருக்கிறார்கள். அதற்காக இப்போது கட்சியில் ஏதாவது பெரிய பதவி கிடைக்குமா?

பதில்: “அப்பா" என்ற முறையில் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். “தலைவர்" என்பதற்காக நான் சர்வாதிகாரி அல்ல. எல்லோரும் சேர்ந்ததுதான் கட்சி. எனவே கட்சிதான் எந்த முடிவையும் செய்யும்.

கேள்வி: சென்னைக்கு எப்போது வருகிறார்கள் என்பது நிச்சயமாகி விட்டதா?

பதில்:
எப்போது வருகிறார் என்று தெரியவில்லை. நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் மற்றவர்களும் அங்கே இருக்கிறார்கள். வழக்கறிஞர்களோடு நீதி மன்றத்தில் கலந்து பேசி சொல்வார்கள்.

கேள்வி: தற்போது கிடைத்துள்ள ஜாமீன், வழக்கில் பிறகு கிடைக்கக் கூடிய வெற்றிக்கு முன்னுதாரணமாக இருக்குமா?

பதில்: நான் நீதிமன்றங்களைப் பற்றியும், வழக்கின் போக்குகள் பற்றியும் விவாதிப்பது முறையல்ல!

கேள்வி: தற்போது கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால், ராஜாவையும் ஜாமீன் போடச் சொல்லி வற்புறுத்துவீர்களா?

பதில்: அதைப் பற்றி ராஜா என்னுடைய கருத்துக்களைக் கேட்டால் உரிய கருத்துக்களைச் சொல்வேன். இதுவரை ராஜா அதைப்பற்றி என்னிடம் பேசவில்லை.

கேள்வி: கனிமொழியை ஜாமீனில் விட்ட பிறகு, தான் ஜாமீன் கேட்பது பற்றி முடிவு செய்வேன் என்று ராஜா சொல்லியிருந்தாரே?

பதில்: என்னிடம் கலந்து பேசி, அவர் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.

கேள்வி: கனிமொழி ஜாமீன் பெற்று சென்னைக்கு வரும்போது, கட்சித் தொண்டர்களின் வரவேற்பு பெரிதாக இருக்குமா? பலமாக இருக்குமா? ஏற்பாடு செய்யப்படுமா?

பதில்: வரவேற்பு இருக்கும். அது பலமாக இருக்குமா, பெரிதாக இருக்குமா என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆறு மாதங்களாக சிறையிலே இருந்து விட்டு வருகிறார். உள்ளத்தால் எல்லோரும் ஒன்றுபட்டு வரவேற்றால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

கேள்வி: கனிமொழியின் தாயார் எப்படி இருக்கிறார்?

பதில்: அவர் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தாய் உள்ளம் அல்லவா

English summary
DMK Chief Karunanidhi has expressed his happiness over release of Kanimozhi on bail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X