தாலுகா அலுவலகம் ஜப்தி- 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரியும் அலுவலர்கள்
விளவங்கோடு: விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள மேஜை, நாற்காலிகள் குழித்துறை நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டதால் அலுவலர்கள் கடந்த 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரிகின்றனர். இதனால் பொதுமக்கள் சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
விளவங்கோடு தாலுகா அலுவலகம் குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தை பொறுத்தவரை போதுமான ஊழியர்கள் இல்லை என்ற குறைபாடு உள்ளது. இந்நிலையில் குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு இடம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதற்கு 9 லட்சம் ரூபாய் வழங்க குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தவிட்டும் தாலுகா அலுவலகத்தில் இருந்து போதுமான நிதி வழங்கப்படாததால் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலிகள் கடந்த 10ம் தேதி ஜப்தி செய்யப்பட்டது.
ஆனால் அரசின் ஆவணங்கள் என்று கூறப்படும் பைல்களை தரையில் குவித்து வைக்கப்பட்டது. ஜப்தி நடவடிக்கை முடிந்து 20 நாட்கள் கடந்தும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் விளவங்கோடு தாலுகா அலுவலகத்தின் மத்திய பகுதி வெறிச்சோடி உள்ளது. ஊழியர்கள் எங்கு இருப்பது என்று தெரியாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து பணி புரிந்து வருகின்றனர். இதனால் அவசர சான்றிதழ் பெறுவதற்காக வந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்த தாலுகா அலுவத்தின் மீது இதை போல் 17 வழக்குகள் உள்ளன. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே போல் ஒரு வழக்கிற்கு ஜப்தி நடவடிக்கை நடந்தது. அந்த மேஜைகளுடன் சேர்ந்து இந்த மேஜை, பீரோக்களும் தற்போது கோர்ட் வளாகத்தில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications