For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு குறித்த பேச்சு: தமிழகம் பங்கேற்காது- தலைமைச் செயலாளர் சாரங்கி

Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் நாளை நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்காது என்று மாநில தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்.

நாளை டெல்லியில் உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக, கேரள அதிகாரிகள் குழு கலந்து கொள்கிறது. இதைப் பயன்படுத்தி இரு மாநிலங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவை உள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பது சரியாக இருக்காது என்பதால் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக பொதுப்பணித்துறைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்ட அறிக்கையில்,

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் டெல்லியில் 5-ந் தேதி நடத்தப்பட உள்ள அதிகாரப்பூர்வமற்ற பேச்சு வார்த்தையில், ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி தமிழக அரசு கலந்துகொள்ளாது என்று தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
TN govt will not participate centre sponsrored Mullaiperiyar talks in Delhi tomorrow. TN govt's chief secretary Debendranath Sarangi has announced this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X