For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் கள்ளச்சாராயம் விற்றால் தூக்கு தணட்னை: ஆளுநர் ஒப்புதல்

By Siva
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தி்ற்கு அமமாநில ஆளுநர் கமலா ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 136 பேர் பலியாகினர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான சட்டம் தேவை என்று குஜராத் முதல்வர் மோடி தலைமையிலான அரசு தீர்மானித்தது. தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ 1 ஆண்டு சிறை தண்டனை தான் என்பதால் பலரும் துணிச்சலாக கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர்.

இந்த நிலையை மாற்ற கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் குஜராத் சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் 7 முதல் 10 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும். கள்ளச்சாராயத்தை குடித்து யாராவது இறந்தால் அதை விற்றவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்ட திருத்தத்திற்கு குஜராத் ஆளுநர் கமலா ஒப்புதல் அளித்துள்ளார். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கிறது.

குஜராத்தில் முழுமையான மதுவிலக்கு இருக்கையில் இவ்வாறு கள்ளச்சாராயம் விற்கப்படுவதைத் தடுக்க தான் இந்த கடுமையான சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Gujarat governor Dr. Kamla has okayed death penalty to those found guilty of manufacturing, selling and supplying spurious liquor which result in death. According to this amendment those who manufacture, sell spurious liquor or hooch will get 7 to 10 years of imprisonment along with fine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X