கம்பத்திற்குப் பதில் தேனியில் உண்ணாவிரதம்- வைகோ அறிவிப்பு
சென்னை: கம்பத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் தனது உண்ணாவிரதப் போராட்டம் தேனிக்கு மாற்றப்பட்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கவும், கேரளா புதிய அணை கட்ட முயற்சி செய்வதை தடுக்கவும் டிசம்பர் 8-ந் தேதி (நாளை) கம்பம் நகரில், நானும், 5 மாவட்ட பாசன விவசாய சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், கம்பம் பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகி இருப்பதால் அதே நாளில் கம்பத்துக்கு பதிலாக தேனி நகரில் நடைபெற இருக்கிறது. கொளத்தூர் மணி தொடங்கி வைக்கிறார். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நிறைவு செய்து வைக்கிறார்.
புதன்கிழமை மதுரையில் தொடங்கும் பிரச்சாரம், தேனி நகரில் நிறைவு பெறுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications