For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பரத்தில் சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கிய தீட்சிதர்கள்-10 பேர் மீது வழக்கு

Google Oneindia Tamil News

சிதம்பரம்: சிதம்பரத்தில் சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கியுள்ளனர். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அடையாளம் தெ ரியாத 10 தீட்சிதர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் புகழ் பெற்றது சிதம்பரம் நடராஜர் கோவில். இந்த கோவிலில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருவாசகம் பாடுவது தொடர்பாக எழுந்த பிரச்சனையில் பலருக்கும் அறிமுகமானவர் சிவனடியார் ஆறுமுகசாமி. இவர் தினமும் கோவிலுக்குச் சென்று திருவாசகம் பாடி வருகிறார்.

இந்த நிலையில் நடராஜர் கோவிலில் நடன தீர்த்த விநாயகம் சன்னதி அருகே சிவனடியார் ஆறுமுகசாமி உட்கார்ந்திருந்தபோது 10 தீட்சிதர்கள் அவரை கோவிலை விட்டு வெளியே போகும்படி கூறி மிரட்டி, அவரது பையை கிழித்து தாக்கியுள்ளனர்.

இது குறித்து சிவனடியார் ஆறுமுகசாமி கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார், சிதம்பரம் கோவிலைச் சேர்ந்த 10 தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
10 dikshithars of Chidambaram Natarajar temple have tried to assault Sivanadiyar Arumugamsamy in the temple itself. Police have registered a case based on the complaint given by Arumugasamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X