For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு- கேரளாவைக் கண்டித்து தமிழகம், புதுவையில் 60,000 வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட்ப் பணிகளைப் புறக்கணித்து இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடந்து கொள்ளும் போக்கைக் கண்டித்து தமிழகத்தில் பல மட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில்,வக்கீல்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கோவை முதல் ராமநாதபுரம் வரையிலும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. எந்தக் கோர்ட்டிலும் இன்று பணிகள் நடைபெறவில்லை. கிட்டத்தட்ட 60,000 வக்கீல்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களும், மதுரை உயர்நீதிமன்றக் கிளை வக்கீல்களும் கூட போராட்டத்தில் பங்கேற்றுப் பணிகளுக்குப் போகவில்லை.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வக்கீல்களின் போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் கோர்ட் பணிகள் முற்றிலும் முடங்கின.

English summary
TN and Puducherry lawyers are in boycott of courts protest in all courts. Nearly 60,000 lawyers protesting the Kerala govt for its attitude towards TN over Mullaiperiyar dam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X