For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரணாப் முகர்ஜியை புகழ்ந்து தள்ளிய அருண் ஜேட்லி!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் அதை தீர்த்து வைக்க உதவும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை பாஜக பாராட்டியுள்ளது.

இது குறித்து ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் அருண் ஜேட்லி கூறியதாவது,

மற்ற காங்கிரஸ் தவைவர்கள் போல் இல்லாமல் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அடிக்கடி எதிர்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இவர் மட்டும் வித்தியாசமானவர்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு கொள்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதை நிறுத்திவைக்கவில்லை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு பிரிவினரின் எதிர்ப்பால் தான் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய உற்பத்தி பிரிவில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டி இருக்கையில் சில்லறை வர்த்தகத்தை கொண்டு வருவது முறையல்ல. சிறப்பான சீரிதிருத்தங்களைக் கொண்டு வந்து உற்பத்தி செய்யும் செலவைக் குறைக்கலாம்.

தேசி ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது காங்கிரஸ் தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு நாட்டுக்கு எதிரானது என்று கூறினார். அரசும் அன்னிய முதலீட்டை அனுமதிக்கவில்லை என்றார்.

எந்த விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் பிரணாப் முகர்ஜி தான் எதிர்கட்சிகளை சந்தித்து பேசி தீர்வு காண்பார். எப்படியாவது எதிர்கட்சிகளை சமாதானப்படுத்தி பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார். அதனால் தான் பாஜக தலைவர் அருண் ஜேட்லி அவரை புகழ்ந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP leader Arun Jaitley has praised finance minister Pranabh Mukherjee as an exception in the UPA government. It is Pranab who meets opposition leaders frequently unlike others in congress, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X