For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 தமிழர் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம்-நெடுமாறன் தொடங்கி வைத்தார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. பழ. நெடுமாறன் முதல் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப் பட்டு வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தண்டனையை ரத்து எண்ணற்ற தமிழ்ஆர்வலர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் பழ.நெடுமாறன் முதல் கையெழுத்திட்டுட்டுள்ளார். கூட்டமைப்பின் மாநில தலைவர் வக்கீல் நிஜாமுதின், பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கையெழுத்தை பதிவு செய்தனர்.

English summary
Pazha. Nedumaran inaugrated the signature campaign against the hanging of Perarivalan and two others in Rajiv Gandhi murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X