For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் குறித்த தமிழகத்தின் கவலைக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்- அச்சுதானந்தன்

Google Oneindia Tamil News

Achuthananthan
திருவனந்தபுரம்: கூடங்குளம் அணு மின நிலையம் குறித்த தமிழக மக்களின் கவலைக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும். மக்களின் அச்சம் அகலும் வரை அணு மின் நிலைய செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தை முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பயன்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த அறிக்கையை அச்சுதானந்தன் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அச்சுதானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கூடங்குளம் அணுமின்நிலையத்தால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என தமிழக மக்கள் கருதுகின்றனர். தமிழக மக்களின் இந்த நியாயமான அச்சத்தை மத்திய அரசு புரிந்து கொண்டு அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அணுமின்நிலைய விஷயத்தில் தமிழக மக்களின் அச்சம் நீங்கும்வரை அதன் செயல்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும். அணுமின்நிலையம் தொடர்பாக தமிழக மக்கள் தங்களது அச்சத்தையும், பீதியையும் ஆட்சியாளர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளனர். இது தவிர தமிழக அரசும் மத்திய அரசுக்கு எழுத்து மூலமும் தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால் அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் நமது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டில் வைத்து இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அணுமின்நிலையம் தொடர்பான தமிழக மக்களின் போராட்டத்தையும், அச்சத்தையும் ஏளனம் செய்யும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் நமது பிரதமரின் இந்த செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் மதிப்பளிக்காத வகையில் நடந்து கொள்ளும் மத்திய அரசின் செய்லபாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை மத்திய அரசு இனிமேலாவது நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் அச்சுதானந்தன்.

English summary
Kerala opposition leader Achuthananthan has condemned PM Manmohan Singh for his speech on Kudankulam nuclear plant. He said in a statement that, TN people are worried over KKNPP. So PM should address their concern and clear the fear factor among the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X