For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போட்டி போட்டுக் கொண்டு இன்று குஜராத்தில் உண்ணாவிரதம் இருக்கும் மோடி, காங்.

By Siva
Google Oneindia Tamil News

அகமதாபாத்: சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஜாம்நகரில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஏற்கனவே சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி சத்பாவனா உண்ணாவிரதம் என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். தற்போதும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஜாம்நகரில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார். இதேபோன்று இன்று ஜாம்நகரில் காங்கிரஸாரும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்பு தாரோல் நகரில் இருந்து ஜாம்நகர் வரை பாதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த பாதயாத்திரையை பாஜக மாநிஸ தலைவர் ஆர். சி. பால்டு துவக்கி வைக்கிறார்.

மேலும் வரும் 22ம் தேதி ராஜ்கோட்டிலும், வரும் 26ம் தேதியும் மோடி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. மோடி உண்ணாவிரதம் இருக்கவிருக்கும் இடங்களில் காங்கிரஸாரும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

English summary
Gujarat CM Narendra Modi will sit on a day long fast insisting communal harmony in Jamnagar. This is his fourth fast in sadbhawna series.Congress is also staging parallel fast at the same venue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X