For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மு.க.ஸ்டாலின் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதி: நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் அறிவிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதயக் கோளாறு தொடர்பான பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் பரவியதையடுத்து திமுக தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.

மேலும் திமுக மூத்த தலைவர்களும் மருத்துவமனைக்குச் சென்றதால் பரபரப்பு அதிகமானது.

இந் நிலையில், அவர் பூரண நலத்துடன் இருப்பதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

அவர், பொது மருத்துவ சோதனைக்காகவே அங்கு சென்றதாகவும், பூரண நலமுடன் இருக்கும் அவர் இன்றே வீடு திரும்புவார் என்றும் திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

எம்எல்ஏ அலுவலகத்தை காலி செய்ய இடைக்காலத் தடை:

இந் நிலையில் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ அலுவலக இடத்தை மாநகராட்சி திரும்ப எடுத்துக் கொள்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த அலுவலகம் அமைந்துள்ள இடம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என்று கூறி அதை திரும்ப எடுத்துக் கொள்வதற்காக மாநகராட்சியில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் எம்எல்ஏ அலுவலகத்தை காலி செய்ய இடைக்காலத் தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

அலுவலகம் கையக்கப்படுத்தப்பட்டால், ரோட்டில் நாற்காலி-மேஜை போட்டு பணியாற்றுவேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK leader MK Stalin admitted in Ramachandra hospital following heart related issues
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X