For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்காசியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ளநோட்டு

Google Oneindia Tamil News

தென்காசி: தென்காசி பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு இருந்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கி கட்டுபாட்டில் இயங்கி வருகின்றன. இதனால் அனைத்து வங்கிகளில் இருந்தும் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதே போல் தென்காசி ஸ்டேட் வங்கியிலிருந்தும் சென்னை ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசி ஸ்டேட் வங்கியிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பபட்டுள்ள பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்ததாக வங்கி பொது மேலாளர் ராஜலெட்சுமி நெல்லை மாவட்ட எஸ்பிக்கு புகார் மனு அனுப்பி இருந்தார்.

அந்த மனுவில் தென்காசி பாரதஸ்டேட் வங்கியிலிருந்து அனுப்பப்பட்ட பணத்தில் நான்கு 500 ரூபாய் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

எஸ்பி உத்தரவின் பேரில் தென்காசி போலீசார் கள்ள நோ்ட்டு விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Rs 5000 counterfeit notes have been found in RBI, Chennai. The notes were sent to the RBI from SBI branch in Tenkasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X