For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரன், புலிகளின் ஸ்டாம்புகளுக்கு இலங்கை தபால்துறை தடை!

By Chakra
Google Oneindia Tamil News

Prabhakaran Stamp
கொழும்பு: விடுதலைப் புலிகளின் ஸ்டாம்புகள் கொண்ட கடிதங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் போது, சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளை புறக்கணித்துச் செயல்படப் போவதாக இலங்கை தபால் துறை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொண்ட ஸ்டாம்புகளை பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு ஸ்டாம்பும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

ஆனால், இது தொடர்பான சர்வதேச தபால் ஒன்றியத்தின் சில விதிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை தபால் துறை தெரிவித்துள்ளது.

மேலும் விடுதலைப் புலிகள் தொடர்பான அடையாளங்களுடன் கூடிய ஸ்டாம்புகள் ஒட்டப்பட்ட தபால்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று பிரான்ஸ் தபால்துறைக்கு இலங்கை தபால்துறை கோரிக்கை வைத்துள்ளது.

இந்த விவகாரத்தில் உள்நாட்டு சட்டங்கள், விதிகளின்படியே செயல்படப் போவதாகவும் சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளுக்கு இணங்கப் போதில்லை என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.

English summary
Sri Lanka’s postal authorities have decided to defy rules and regulations stipulated by the Universal Postal Union when dealing with letters and parcels with stamps bearing the emblem of the LTTE and the image of its late leader, officials said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X