ஆந்திராவில் வரலாறு காணாத குளிர்: 2 நாட்களில் 15 பேர் பலி
ஹைதராபாத்: ஆந்திராவில் வரலாறு காணாத அளவு கடுங்குளிர் நிலவுகின்றது. குளிர் தாங்க முடியாமல் கடந்த 2 நாட்களில் மட்டும் 15 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திராவில் இந்த ஆண்டு கடுங்குளிர் நிலவி வருகின்றது. ஆந்திராவில் உள்ள 23 மாவட்டங்களில் 3 முதல் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகின்றது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் குளிர் தாங்க முடியாமல் கரீம்நகர் மாவட்டத்தில் 5 பேரும், விசாகப்பட்டினத்திலும், குண்டூரிலும் தலா 4 பேர் பலியாகியுள்ளனர்.
நல்கொண்டா மற்றும் வாரங்கல் மாவட்டங்களில் குளிர் தாங்க முடியாமல் தலா 1 பேரும் பலியாகினர். 13 மாவட்டங்களில் வெப்பநிலை 10 டிகிரியை விட குறைந்து காணப்படுகின்றது.
அதிலும் விசாகப்பட்டினத்தில் உள்ள லம்பாசிங்கி என்ற பழங்குடியின பகுதியில் 0 டிகிரியை விட குறைந்து காணப்பட்டதாக தெரிகின்றது. ஆனால் அப்பகுதியில் வானிலைமானி அமைக்கப்படாததால், இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக 1.5 டிகிரி வெப்பநிலை நிலவுகின்றது. கடந்த 100 ஆண்டுகளில் மகாரஷ்டிராவின் எல்லையில் உள்ள மாவட்டத்தில் மட்டுமே குறைபட்சமாக 4.2 டிகிரி வெப்பநிலை நிலவி உள்ளது. மேலும் ஆந்திராவில் கடும் குளிர் தாங்க முடியாமல் 15 பேர் பலியாவது இதுவே முதல் முறை.
இது குறித்து விசாகப்பட்டினத்தில் உள்ள புயல் எச்சரிக்கை நிலையத்தினர் கூறியதாவது,
இமயமலையில் இருந்து வீசும் குளிர் காற்று மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் வழியாக ஆந்திராவில் வீசி வருகின்றது. இதனால் ஆந்திராவில் வெப்பநிலை வரலாறு காணாத அளவு குறைந்து, கடும் குளிர் நிலவி வருகின்றது. இந்த தட்பவெப்பநிலை இவ்வாரம் முழுவதும் தொடரும் என்றனர்.
-
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications