For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூரிய மின்சக்தியுடன் ஆண்டுதோறும் 60,000 பசுமை வீடுகள் கட்டப்படும்: ரோசய்யா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும் என்று சட்டசபையில், உரையாற்றிய ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் பசுமை வீடுகள் சூரியமின்சக்தி வசதி கொண்டதாக கட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு கிராமப்புறக் குடியிருப்பு மேம்பாட்டுத்திட்டம் ஐந்தாண்டுகளில் அனைத்து குக்கிராமங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இத் திட்டத்தின் மூலம் 2011-2012-ஆம் ஆண்டில் 2,020 கிராம ஊராட்சிகளிலுள்ள 25,335 குக்கிராமங்களுக்கு, சாலை, குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சுகாதார வளாகங்களைப் புதுப்பிக்கும் ஒரு பெருந் திட்டமும் நடைபெற்றுவருவதாகவும் ரோசய்யா தனது உரையில் சுட்டிக்காட்டினார்

English summary
'TN Chief Minister’s Solar Powered Green House Scheme to construct 60,000 new houses per year is also under progress" said Governor Rosaiah in his assembly speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X