அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் ரோம்னி தொடர்ந்து முன்னிலை

Subscribe to Oneindia Tamil

ப்ளோரிடா: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் மிட் ரோம்னி முன்னிலையில் உள்ளார். பளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதனால் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட உள்ள தற்போதைய அதிபர் ஒபாமாவுடன் மிட் ரோம்னியே தேர்தல் களத்தில் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

புளோரிடா மாகாண உட்கட்சித் தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட கிங்கிரிச்சை விட ரோம்னி கூடுதல் வாக்குகள் பெற்றார்.

தற்போதைய அதிபர் ஒபாமாவின் பதவி காலம் இந்த ஆண்டோடு முடிவடைகிறது. இதனால் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஒபாமாவே போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. இக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களின் செல்வாக்கை அறிய ஒவ்வொரு மாகாணத்திலும் உட்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி உள்பட 12க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். பல மாகாணங்களில் ரோம்னி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.

மிட் ரோம்னி மாசசூசட்ஸ் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் கூட ஒபாமாவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தக் கூடியவராக ரோம்னி இருப்பார் என்றே முடிவுகள் வெளியாகின.

அமெரிக்காவில் ஒபாமாவால் சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தை ரோம்னி போன்றவர்களே சீரமைக்க முடியும் என்பது அவரது ஆதரவாளர்கள் பலரது கருத்து.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+