For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரானில் பிபிசி பெர்ஷிய மொழி சேனலுக்கு வேலை பார்த்த நிருபர்கள் கைது!

By Chakra
Google Oneindia Tamil News

தெஹ்ரான்: ஈரானில் தடை விதிக்கப்பட்ட பிபிசி பெர்ஷிய மொழி சேனலுக்கு வேலை பார்த்ததாக பல நிருபர்களை அந் நாட்டு அரசு கைது செய்துள்ளது.

அணு ஆயுத ஆராய்ச்சி விவகாரத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா-இங்கிலாந்து தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ள இந்த நாடுகள், அந் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியையும் நிறுத்த உள்ளன.

இந் நிலையில், ஈரான் சில பதிலடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பிபிசியின் பார்சி மொழி சேனலான BBC Persian தொலைக்காட்சி ஈரானில் தடை விதிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த சேனலுக்கு செய்தி திரட்டித் தந்ததாக பல நிருபர்களை ஈரான் நேற்று கைது செய்துள்ளது.

இவர்கள் சட்ட வி‌ரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நிருபர்களின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டு வந்ததாகவும் அவர்களின் நடவடிக்கைகள் சட்டவி‌‌ரோதமாக இருந்ததால் ‌கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.

ஆனாலும் கைது செய்யப்பபட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை ஈரான் வெளியிடவில்லை.

இந் நிலையில் தங்களது பெர்ஷிய சேனலுக்காக யாரும் ஈரானுக்குள் வேலை பார்க்கவில்லை என்று பிபிசி அறிவித்துள்ளது.

English summary
Reports from Iran say several people have been detained for alleged links to the BBC's Persian service, which is banned in the country. Iran's semi-official Mehr news agency reported on Monday evening that "a number of people, deceived by the lie-spreading BBC Persian network," had been arrested. The report cited unnamed sources as saying that those arrested were allegedly receiving 'huge amounts' of money to collect news and information from Iran for the BBC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X