For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி. முதல் கட்டத் தேர்தல்: சுதந்திரத்திற்குப் பிறகு தற்போது அதிகபட்ச வாக்குப்பதிவு- தலைமை தேர்தல் அ

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தர பிரதேசத்தில் நேற்று நடந்த முதல் கட்டத் தேர்தலில் அதிகபட்சமாக 62 முதல் 64 சதீவத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதவாது,

வாக்குரிமை பற்றி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக உத்தர பிரதேசத்தில் நடந்த முதல் கட்டத் தேர்தலில் அதிகபட்சமாக 62 முதல் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குரிமை விலைமதிப்பற்ற உரிமையாதலால் அதை கடமையாககக் கருத வேண்டும் என்று மக்களுக்கு எடுத்துரைத்தோம். அதன் விளைவாகத் தான் தற்போது அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன என்றார்.

உத்தர பிரதேச தேர்தல பொறுப்பில் உள்ள துணை தேர்தல் ஆணையர் அலோக் ஷுக்லா கூறியதாவது,

கடந்த 2007ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பதிவான வாக்குகளை விட தற்போது 33 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன. முதல் கட்டத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட மொத்தமுள்ள 18,108 வாக்குச்சாவடிகளில் 3,429 பெரும் பிரச்சனையானவை என்றும், 2,123 பிரச்சனையானவை என்றும் கண்டறியப்பட்டது.

இதுவரை மாநிலத்தில் ரூ.33.23 கோடி கணக்கில் வராத பணம், 4,345 சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த ஆயதங்கள், 6,696 தோட்டாக்கள் ஆகியவற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தவிர 2.4 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த தேர்தல்களில் தற்போது தான் அதிகமான அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. கிராமப்புறங்களில் 65 சதவீதம் பேரும், நகரங்களில் 55 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர் என்று உத்தர பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

English summary
The 62-64 per cent turn out of voters in the first phase of polling in Uttar Pradesh today was a record, Chief Election Commissioner S Y Quraishi said. UP Chief Electorate Officer Umesh Sinha told reporters in Lucknow that "This is probably for the first time after Independence that UP has recorded such a high voter turnout."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X