For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியா அழுகை: காங். தலைவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த பாஜக கோரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

Sonia Gandhi
டெல்லி: டெல்லியில் 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட என்கவுண்டரில் முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்களைப் பார்த்து சோனியா காந்தி அழுதார் என்ற விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகளை சொல்லும் காங்கிரஸ் தலைவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்க விடுத்துள்ளது.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளதாவது:

சோனியா காந்தி அழுதார் என்கிறார் சட்ட் அமைச்சர் சல்மான்குர்ஷித். ஆனால் அவர் அழுகவே இல்லை என்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங்.

இரண்டு காங்கிரஸ் தலைவர்களில் யார் உண்மை பேசுகிறார்கள் என்பதை உண்மை கண்டறியும் கருவி மூலம் சோதனை நடத்தி அறிய வேண்டியுள்ளது.

1984-ம ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நிகழ்ந்த போது சோனியா அழுதாரா?

ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினரான பண்டிட்டுகளுக்கு எதிரான வன்முறையின் போது அவர் அழுதாரா?

டெல்லியில் 2008-ம் ஆண்டு பயங்கரவாதிகள் என்போரை சுட்டுக் கொன்றதற்காக ஏன் சோனியா அழுகிறார் என்றார் அவர்.

சரத்பவார் கருத்து

சோனியா அழுத விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவரும் வேளாண் அமைச்சருமான சரத்பவார், டெல்லி என்கவுண்டர் சம்பவத்தை உத்தரப்பிரதேச தேர்தலுக்குப் பிறகு எழுப்புவோம் என்றார்.

இருப்பினும் ஒரு விவகாரத்தில் அமைச்சர்களும் கட்சித் தலைவர்களும் மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்துவது சரியானது அல்லது என்பதும் பவாரின் கருத்து.

English summary
BJP leader Mukhtar Abbas Naqvi said: "Digvijaya Singh says she did not cry. Sonia Gandhi should clarify whether she cried or not... A lie detector test should be used to find out which Congress leader is speaking the truth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X