For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேஸ்புக் நிறுவனம் விரும்பும்வரைதான் ஜூக்கர்பெர்க் 'சிஇஓ'!

By Mathi
Google Oneindia Tamil News

Zuckerberg
நியூயார்க்: உலகின் முதன்மையான சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனமானது அதன் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்டோரை எந்த நேரத்திலும் எந்த காரணமும் இல்லாமல் நிறுவனத்திலிருந்து நீக்கும் வகையில் அதன் விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஆச்சரியமாக இருக்கிறதா? பேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெக் தமது நிறுவனத்துடன் செய்தியிருக்கும் பணிநியமன ஒப்பந்தம் இப்படித்தான் சொல்கிறது...

பேஸ்புக் நிறுவனம் விரும்பும்வரைதான் அவர் அங்கு பணிபுரிய முடியுமாம். நிறுவனம் நினைத்தால் வேலையை விட்டுவிட்டுத்தான் வரவேண்டும்.

பேஸ்புக் நிறுவனம் கடந்த மாதத்தின் பிற்பகுதியில் பணியாளர்களுக்கான நியமன ஒப்பந்தத்தை பங்குச்சந்தையில் இறங்குவதையொட்டி மறுசீரமைத்ததில் இந்த் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பணியின் தன்மை, லாப நட்ட விவகாரங்கள் போன்ற தற்போதைய விதிகள் நிரந்தரமானது அல்ல.. மாற்றத்துக்குரியது. இந்த மாற்றங்களை பேஸ்புக் போர்டு எழுத்துப்பூர்வமாக அங்கீகரித்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும்.

இது நிறுவனர் ஜூக்கர்பெர்க்குக்கு மட்டுமல்ல.. முதன்மை செயல் அதிகாரி செண்ட்பர்க்குக்கும் இது பொருந்தும். நிதிப் பிரிவு தலைவர் டேவிட் எம்பெர்ஸ்மன் மற்றும் துணைத் தலைவர் மைக் ஸ்க்ரோபெர் ஆகியோருக்கும் பொருந்தும்,

இதேபோல் பேஸ்புக் நிறுவனத்துக்கு போட்டியாக மற்றொரு நிறுவனத்தை தொடங்கும் முயற்சியில் ஜூக்கர்பெர்க் ஈடுபடக் கூடாது என்பதுடன் போட்டி நிறுவனத்துக்கு எந்த ஒரு வகையிலும் உதவியாக இருக்கவும் கூடாது என்கிறது மற்றொரு விதி. ஆனால் இது பேஸ்புக்கில் பணிபுரியும்வரை மட்டுமே.

இவர்கள் பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டால் அவர் என்ன செய்வார்கள் என்பது பற்றி சொல்லப்படவில்லை.

நிறுவனர் ஜூக்கர்பெர்க்கு ஒரு ஆண்டுக்கான அடிப்படை சம்பளம் 5 லட்சம் டாலர். இதில் 45 சதவீதம் ஒரு ஆண்டுக்கான போனஸ் தொகை.

திருமதி செண்ட்பர்க் மற்றும் எம்பெர்சன் ஆகியோருக்கு ஆண்டுக்கான அடிப்படை சம்பளம் 3 லட்சம் டாலர். ஸ்க்ரோபெருக்கான ஒரு ஆண்டு சம்பளம் 2 லட்சத்து 75 ஆயிரம் டாலர்.

இவர்களுக்கும் இவர்களது சம்பளத்தில் 45 சதவீதம் போனஸாக கொடுக்கப்படும்.

பேஸ்புக் நிறுவனத்தில் 4 முதன்மை நிர்வாகிகளுக்கு மட்டுமே ஒரு ஆண்டுக்கு ரூ10 கோடி ஊதியமாக கொடுக்கப்படுகிறது.

English summary
Facebook can terminate services of its chief Mark Zuckerberg at any time for any reason, or even without a reason, but the social networking giant’s founder and CEO also enjoys similar exit rights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X