For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலூரில் மிக மிக தாழ்வாக பறந்த போர் விமானத்தால் மக்கள் பெரும் பீதி-பள்ளிகளுக்கு விடுமுறை

Google Oneindia Tamil News

Jet
கடலூர்: கடலூரில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று மிக மிக தாழ்வாக மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் படு பயங்கர சத்தத்துடன் பறந்ததால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். இதையடுத்து பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

கடலூரில் இன்று மக்கள் பயங்கர அனுபவத்தை சந்தித்தனர். போர் விமானம் ஒன்று மிக மிக தாழ்வான உயரத்தில், மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் படு வேகமாக பறந்து வந்தது. இதனால் மிகப் பயங்கர சத்தம் ஏற்பட்டது.

இதைக் கேட்டு கடலூர் மாவட்ட மக்கள் பெரும் அச்சமடைந்தனர். அதி வேகமாக விமானம் பறந்ததால் பல இடங்களில் வதந்திகள் பரவின. இதையடுத்து குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கடலூர் கலெக்டர் போர் விமானம் மிக மிக தாழ்வாக அதி வேகத்தில் பறந்ததால்தான் இந்த பயங்கர சப்தம் ஏற்பட்டது. வேறு ஒன்றும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

English summary
An IAF fighter craft created big panic in Cuddalore today. The jet was flying at very low altitude over the district with 1000 km per hour speed. Due to this high speed flight, big sound jolted the people. Schools in many areas closed and students sent back to their homes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X