15 நிமிடங்கள் அரசு மருத்துவமனை லிப்டில் சிக்கித் தவித்த அமைச்சர் விஜய்
சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டிட திறப்பு விழாவுக்கு வந்த அமைச்சர் விஜய் 15 நிமிடங்கள் லிப்டில் சிக்கித் தவித்தார். இது குறித்து தகவல் அறிந்த பொதுப் பணித்துறையினர் அவரை மீட்டனர்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்த அவசர கால சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை வார்டு ஆகிய கட்டிடங்கள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. மேலும் புதிய காப்பீட்டுத் திட்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இக்கட்டிடங்களின் திறப்பு விழா இன்று காலையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.
அதன்பிறகு முதல் மாடியில் உள்ள மற்ற வார்டுகளை பார்வையிட விரும்பிய அவர் லிப்டில் ஏற முயன்றார். ஆனால் லிப்ட் பட்டன் செயல்படவில்லை. சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு லிப்ட் பட்டன் வேலை செய்து கதவு திறந்தது.
லிப்டிற்குள் அமைச்சர் விஜய், சூப்பிரண்டு குணசேகரன், உதவியாளர் உள்ளிட்டோர் நுழைந்த உடன் கதவு மூடிக் கொண்டது. அதன்பிறகு கதவு திறக்கவேயில்லை. லிப்டில் சிக்கிய அமைச்சரை மீட்க மருத்துவமனை ஊழியர்கள் நடத்திய முயற்சி தோல்வியில் முடிந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுப் பணித்துறையினர் லிப்ட் கதவை திறந்து அமைச்சர் விஜய்யை மீட்டனர். சுமார் 15 நிமிடங்கள் லிப்டில் சிக்கித் தவித்த அமைச்சர் வெளியே வந்த பிறகே மருத்துவமனை ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications