For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது: மத்திய உள்துறை அமைச்சகம்

By Chakra
Google Oneindia Tamil News

Homo
டெல்லி: இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஓரினச் சேர்க்கை தவறல்ல எனறு கடந்த 2009ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந் நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஓரினச்சேர்க்கை முற்றிலும் ஒழுக்ககேடான செயல். இது இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், சமூக ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு எதிரானது. மேலும் இது இயற்கைக்கும் முரணானதாகும்.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கலாச்சாரம் உலகளவில் பேசப்படும் உயர்வான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரம் மற்ற கலாச்சாரங்களை விட மாறுபட்டது. எனவே, ஓரினச் சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

ஓரினச் சேர்க்கைக்கு எதிராக தமிழ்நாடு முஸ்லீ்ம் முன்னேற்றக் கழகம், பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Union Home Ministry on Thursday opposed decriminalisation of gay sex in the country before the Supreme Court. "This is highly immoral and against the social order," the Ministry told the apex court. The Ministry said that India's moral and social values are different from those of other countries and India cannot be guided by them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X