For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா நன்றாக இருந்துச்சாம்..ஆர்.எஸ்.எஸ். புலம்பல்!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஆங்கிலேயர் ஆட்சியல் இந்தியா தற்போதைவிட நன்றாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் தெரிவித்ததாக முன்னணி செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது,

பணபலமும், ஆள்பலமும் உள்ளவர்கள் தான் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். விண்ணைத் தொடும் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த 64 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் ஆட்சியில் இருந்துள்ளன. இருப்பினும் நாட்டின் நிலைமையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எது தவறாகப் போனது என்பதை மக்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசையும் தாக்கியுள்ளதாக அமைந்துள்ளது பக்வத்தின் பேச்சு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகம்தான் பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ். பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ், இடதுசாரிகள் குற்றம்சாட்டி வரும் நேரத்தில் இந்தியா ஆங்கிலேயர்கள் காலத்தில் சிறப்பாக இருந்ததாக பக்வத் தெரிவித்துள்ளார்.

2007ம் ஆண்டு நடந்த ரயில் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள். இந்த தாக்குதல் வழக்கில் இந்தூரைச் சேர்ந்த ஆர். எஸ். எஸ். ஆதரவாளர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
RSS feels that the country was better off under British rule. RSS chief Mohan Bagwat lamented on the fact that the rich and influential dominate the politics. He also expressed his worries about increasing price rise and high inflation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X